உலகம்

ரூ.510 கோடி மதிப்புள்ள கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிற்கு வழங்கிய பைசர் நிறுவனம்

webteam

பைசர் மருந்து நிறுவனம் இந்தியாவிற்கு 510 கோடி ரூபாய் மதிப்புள்ள கொரோனா தடுப்பு மருந்து பொருட்களை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக, பைசர் நிறுவத்தின் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான ஆல்பர்ட் போர்லா தனது நிறுவனத்தில் பணி செய்து வரும் இந்திய பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் கொரோனா தொற்று பரவலால் நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்துள்ள இந்தியாவின் மீது அக்கறை கொண்டுள்ளோம் என்றுஇம் எங்களது இதயங்கள் உங்களுக்கும், உங்கள் அன்புகுரியவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆல்பர்ட் போர்லா கூறும் போது, “ கொரோனாவுக்கு எதிராக இந்தியா எதிர்கொண்டுள்ள போரில் நாங்களும் பங்குகொள்ள விரும்புகிறோம். அதற்காக நிறுவன வரலாற்றில் இல்லாத வகையில் மிகப்பெரிய நிவாரணப்பணியினை முன்னெடுக்கிறோம்.

தற்போது, அமெரிக்கா, யூரோப், ஆசியா ஆகிய இடங்களில் பைசர் இணை நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிற்கு அனுப்புவதற்கான பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது இந்திய அரசின் கொரோனா சிகிச்சை நெறிமுறைகளின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கும் பைசர் நிறுவனத்தின் மருந்துகள் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த மருந்துப்பொருட்கள் உடனடியாக கிடைக்கும். இந்திய அரசாங்கம் மற்றும் எங்களது தொண்டு நிறுவனங்களின் மருந்துப்பொருட்களின் தேவை அதிகமுள்ளோருக்கு இந்த மருந்துகள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியுள்ளார்.