உலகம்

‘ரஷ்யா-உக்ரைன்’ போரில் சிக்கிய செல்லப்பிராணிகள்; மனதை உருக்கும் புகைப்படத் தொகுப்பு

EllusamyKarthik

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள காரணத்தால் அந்த நாட்டில் வசித்த மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிலர் உள்நாட்டிலேயே அகதிகளாக நிற்கின்றனர். சிலர் போரில் காயம்பட்டு உயிரிழந்துள்ளார்கள் (997 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்). சிலர் காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். சிலர் ரஷ்யாவுக்கு எதிரான போரில் தங்களை (18 முதல் 60 வயது வரை உள்ள நபர்கள்) ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் உக்ரைன் தேசத்து மக்களால் அன்புடன் பாசமும், நேசமும் காட்டி வளர்க்கப்பட்ட செல்லப்பிராணிகள் சொல்லிமாளாத துயரை எதிர்கொண்டுள்ளன. 

தங்கள் செல்லப்பிராணிகள் மீது அதிக நேசம் கொண்டவர்கள் அதனை தங்களுடன் கொண்டு சென்றுள்ளனர். உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் கூட சிலர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் நாடு திரும்பி இருந்தனர். அதே நேரத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு உடமைகள், அன்புடன் வளர்த்த பிராணிகள் என அனைத்தையும் துறந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் செல்லப்பிராணிகளின் எஜமானர்கள் சிலர். அதன் காரணமாக அவை உள்நாட்டிலேயே வளர்த்து கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. அந்த நரகத்தில் இருந்து எப்போது மீட்கப்படுவோம் என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளன அந்த செல்லப்பிராணிகள். நாய்கள், பூனைகள், கிளிகள் மற்றும் ஆமைகளும் இதில் அடங்கும். அதன் புகைப்படங்கள் இங்கே...