இந்தியர் குல்பூஷன் ஜாதவை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முஸாமில் அலி என்ற வழக்கறிஞர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவ் தங்கள் நாட்டில் உளவு பார்த்தார் என கூறி பாகிஸ்தான் அவரை கைது செய்தது. அவருக்கு மரண தண்டனையும் வழங்கியது. இதனை எதிர்த்து இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. அப்போது ஜாதவின் தண்டனையை நிறுத்தி வைக்க பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் குல்பூஷன் ஜாதவை உடனடியாக தூக்கிலட வேண்டும் எனக் கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.