உக்ரைனின் கார்கிவ் பல்கலைக்கழகத்தில் சிக்கியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 66 மாணவர்களை விரைவாக மீட்கவேண்டும் என, அவர்களின் பெற்றொர்கள் மத்திய மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது உக்ரைனில் நடந்து போரின் காரணமாக பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் சுமார் 250 பேர் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவரும், பல்கலைகழகத்தின் தரைதளத்தில் (pipe line) பதுங்கி உள்ளனர். இதனால் மூச்சு விடுவதற்கும் கடினமாக இருப்பதாகவும், இயற்கை உபாதைகளை கழிக்க செல்லவும் மிகவும் சிக்கலாக உள்ளதாக பெற்றோர்களுக்கு தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். அவர்களில் 66 பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள். இம்மாணவர்களின் பெற்றோர், அரசிடம் தங்களது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த இரு தினங்களாக செல்போனில் பேசி வந்த இம்மாணவர்கள், நேற்று மதியத்திற்கு பின் செல்போனில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கெனித்தின் தந்தை புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் ரஷ்யாவில் எல்லைப்பகுதி பல்கலைகழகத்தில் இருந்து அருகில் இருப்பதாகவும் ரஷ்யாவிடம் பேசி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இம்மாணவர்களில், சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர்கள் தாமஸ், ரூபி தாமஸ் தம்பதியின் மனக் கெனித்தும் ஒருவர். இத்தம்பதிக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் இரண்டாவது மகன் கெனித் தாமஸ். இவர் உக்ரைனில் உள்ள கார்கிவ் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார். மேலும் ஆதம்பாக்கத்தை சேர்ந்த விஷால் மற்றும் ராமாபுரத்தை சேர்ந்த ரபேகா, திருவாரூரை சேர்ந்த அபு உள்ளிட்டோரும் சிக்கியுள்ளனர். இவர்களது பெற்றோரும், தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.