உலகம்

கின்னஸ் சாதனைக்கு தயாராகும் 50 செ.மீ. நீளமான காதுகளை கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டி!

ச. முத்துகிருஷ்ணன்

பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்து இரண்டு வாரங்களே ஆன ஆட்டுக்குட்டி நீளமான காதுகளை கொண்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது ஹசன் நரிஜோ என்பவரின் ஆட்டு பண்ணையில் ஆடு ஒன்று குட்டியை ஈன்றது.

அந்த ஆட்டுக்குட்டியின் காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதை விட மிகவும் நீளமாக இருப்பதை கண்டு வியப்படைந்தனர். சம்பா என பெயரிடப்பட்டுள்ள அந்த
ஆட்டுக்குட்டியின் காது 50 சென்டிமீட்டர் நீளமாக இருக்கும் நிலையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது.