பாகிஸ்தானின் கராச்சியில் பெண் என்பதாலேயே ஒருவருக்கு இருசக்கர வாகன லைசென்ஸ் மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கராச்சி நகரில் உள்ள அரசு அலுவலகத்திற்கு லைசென்ஸ் பெறுவதற்காக சென்ற பெண்ணை, அதிகாரி ஒருவர் "கெட் அவுட்" என்று வெளியே துரத்தியுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட ஷிரீன் பெரோஷ்பூர்வல்லா என்ற பெண் டிவிட்டரில், "பாகிஸ்தானில் பெண்கள் பைக் ஓட்டக்கூடாதா" என்று கேள்வி எழுப்பினார். அந்தப் பதிவு மக்களிடையே பரவி விவாதத்தை உருவாக்கியது.
கோப்புப் படம்
இதுபற்றி லைசென்ஸ் மறுக்கப்பட்ட அந்தப் பெண் மற்றொரு அலுவலகத்தில் பணிபுரியும் தனக்குத் தெரிந்தவரிடம் விசாரித்துள்ளார். பெண்களுக்கு பொதுவாக இருசக்கர வாகன லைசென்ஸ் தருவதில்லை என்று அப்போது அவருக்குத் தெரியவந்தது.
கோப்புப் படம்
இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு அவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் தனக்கு லைசென்ஸ் கிடைத்துள்ளதாகவும், அதற்காக உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் ஷிரீன் கூறியுள்ளார்.