உலகம்

‘பாக். முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி டான்ஸ் எதற்கு?’ - நெட்டிசன்கள் கேள்வி 

webteam

பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடைபெற்ற பெல்லி டான்ஸ் நிகழ்வுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்க அந்நாட்டு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அதன்படி, முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை பாகிஸ்தானின் எஸ்.சி.சி.ஐ.பி கடந்த 4 தேதி முதல் 8 வரை அஜர்பைஜானில் நடத்தியது. 

அஜர்பைஜானில் உள்ள பாகுவில், சர்ஹாத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி (எஸ்.சி.சி.ஐ.பி) நடத்திய இந்த முதலீட்டாளர்கள் மாநாடு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. மாநாட்டிற்கான மேடையில் பெல்லி கலைஞர்கள் நடனம் அவ்வப்போது நடத்தப்பட்டது. இது சர்ச்சைகளுக்கு உள்ளானது.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி  டான்ஸ் தேவையா என பலரும் கேள்வி எழுப்பினர். பெல்லி டான்ஸின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர். அந்த வீடியோவை  பகிர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், ''பாகிஸ்தானுக்கான முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி நடனக்கலைஞர்களுடன் முதலீடுகளை ஈர்க்க முயற்சி..'' என தெரிவித்துள்ளார்.