ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. சிந்து நதி ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியதால் பதற்றம் அதிகரிக்க, பாகிஸ்தான் ராணுவம் நீர் உரிமை குறித்து போருக்கு தயார் என எச்சரிக்கிறது. இதன் நடுவில் ஷெபாஸ் ஷெரீப் கத்தார் அமீருடன் பேசி அரபு ஆதரவை உறுதிப்படுத்த முயல்கிறார்.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. இது உலகளவில் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது... அதே சமயம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிந்து நதி ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறது..
இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தான் தனது நீர் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என கூறியுள்ளது...
அதே சமயம்,"சிந்து நதியைப் பாகிஸ்தானுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த இந்தியா விரும்புகிறது என்றும், இந்த விவகாரத்தில் நாங்கள் போர் செய்ய தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி (Bilawal Bhutto Zardari) எச்சரிக்கை விடுத்துள்ளார்..
பாகிஸ்தான் மீண்டும் போர் தொடுக்க நினைத்தால் இந்த முறை எழுதிருக்கவே முடியாத வகையில் அடிப்போம் என ஏற்கனவே இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது..
இப்படி பதற்றமான சூழலுக்கு மத்தியில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், கத்தார் நாட்டின் அமீர் பெருமதிப்பிற்குரிய ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த உரையாடலின் போது, கத்தார் நாட்டு மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்ற தனது ஆதரவை தெரிவித்தார்.
மேலும், பிராந்திய அமைதியைப் பாதுகாப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான முயற்சிகள் மூலம் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும் என அவர் வலியுறுத்தினார்.
பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார செழிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் இரு நாடுகளும் தங்களின் கூட்டுப் பொறுப்பையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தின
பாகிஸ்தான் பிரதமரின் இந்த உரையாடலில் இந்திய விவகாரம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றாலும், அரபு நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக தற்போது இருந்தே பாகிஸ்தான் தயாராகி வருவதாக பார்க்கப்படுகிறது..
ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் அரபு நாடுகளின் உதவி தேவை என்பதால் பாகிஸ்தான் இதுபோன்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர் அரசியல் கட்சி நிபுணர்கள்..!