பாகிஸ்தான் பிரதமரைத் தேர்வு செய்வதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் சொத்து குவித்திருப்பதாக பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட நிலையில், அதுகுறித்த விசாரணை அறிக்கையில் ஊழல் புகார் உறுதி செய்யப்பட்டது. அந்த வழக்கில், நவாஸ் ஷெரீபை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, புதிய பிரதமராக தனது சகோதரர் ஷெபாஸ் ஷெரிப்பை நியமிக்க நவாஸ் முடிவு செய்தார். எனினும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாததால், இடைக்கால பிரதமராக தனது நம்பிக்கைக்குரிய அப்பாசியை நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தேர்வு செய்தது.
இன்று நாடாளுமன்றத்தில் முறைப்படி தேர்வு செய்யப்படும் அப்பாசி, 45 நாட்கள் தற்காலிக பிரதமராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.