உலகம்

பாகிஸ்தானில் போலீஸ் அதிகாரியாக தேர்வான முதல் இந்துப் பெண்

webteam

பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் சிந்து மாகாணம் நடத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் புஷ்பா கோலி. இவர் சிந்து மாகாணம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்றதை அடுத்து துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானில் முதல் இந்து பெண்ணாக போலீஸ் அதிகாரி ஆகியுள்ளார்.இதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் இந்து சமுதாயத்தைச் சேர்ந்த சுமன் பவான் போடானி என்பவர் சிவில் மற்றும் நீதித்துறை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டு இருந்தார். இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்துக்கள் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ளது. பாகிஸ்தானில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்வதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது. இதில், சிந்து மாகாணத்தில்தான் அதிக அளவில் இந்துக்கள் உள்ளனர்.