உலகம்

நவாஸ் ஷெரீப்பிடமிருந்து பிரதமர் பதவி பறிப்பு - பாக். உச்சநீதிமன்றம் அதிரடி

நவாஸ் ஷெரீப்பிடமிருந்து பிரதமர் பதவி பறிப்பு - பாக். உச்சநீதிமன்றம் அதிரடி

webteam

பனாமா கேட் ஊழல் வழக்கில் சொத்துக் குவித்தது நிரூபணமானதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடைப்பெற்று வந்தது. இந்நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான இந்த வழக்கில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அதில், பனாமா கேட் ஊழல் வழக்கில் சொத்துக் குவித்தது நிரூபணமானதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் நவாஸ் ஷெரீப். மேலும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை 
நடத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியாதலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.