pakistan rocket x page
உலகம்

எல்லைப் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டம்.. உற்றுநோக்கும் இந்தியா!

பாகிஸ்தான் தனது கடல் எல்லை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக ராணுவ வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

PT WEB

பாகிஸ்தான் தனது கடல் எல்லை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக ராணுவ வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

pakistan rocket

தரையிலிருந்து தரைப்பகுதிய நோக்கியே இந்த ஏவுகணை சோதிக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் நடத்தப்படும் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவை ஒட்டி நடைபெறும் இந்த சோதனை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தரும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் போர் விமானங்கள், எல்லையில் தொடர்ந்து ரோந்து சென்றன. இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்வினைகள் குறித்து ஆலோசிக்க பாகிஸ்தானும் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.