நேற்றிரவு துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானத்தை தரையிறக்கும்போது பள்ளளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் இரண்டாக பிளந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கோர விபத்திற்கு இந்தியா முழுக்க உள்ள அரசியல்வாதிகளும் பிரபலங்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ”கேரள மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது அப்பாவி உயிர்களை இழக்க வழிவகுத்துள்ளது. துயரமடைந்த குடும்பங்களுக்கு இந்தக் கடினமான நேரத்தில் அல்லாஹ் பலம் தருவார்” என்று ஆறுதலை வெளிப்படுத்தியுள்ளார்.