Bumrah Afridi pt desk
உலகம்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..! பும்ரா தந்தையானதை வாழ்த்தி பரிசளித்த பாக். வீரர் ஷாஹீன் அஃப்ரிடி!

குழந்தைக்கு தந்தையான பும்ராவை பாராட்டி பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி பரிசளித்துள்ளார்.

webteam

இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில் மழையால் போட்டி தடைபட்டது. இதையடுத்து இந்த போட்டி நேற்று விட்ட இடத்தில் இருந்து இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bumrah Afridi

இந்நிலையில், சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு குழந்தை பிறந்துள்ளது. அதற்கு வாழ்த்து தெரிவித்து பும்ராவுக்கு, பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி பரிசு ஓன்றை வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த வீடியோவில் பும்ராவிற்கு ஷாஹீன் அஃப்ரிதி பரிசுப் பொருளை வழங்குகிறார். பும்ரா ‘நன்றி’ ’நன்றி’ நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.

‘உங்கள் மகன் அடுத்த பும்ராவாக வருவார்’ என அஃப்ரிடியும் அன்போடு வாழ்த்தினார். இந்த வீடியோ இந்திய - பாகிஸ்தான் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். வீடியோ பதிவிட்டு பலரும் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.