உலகம்

பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க கட்டுப்பாடு

rajakannan

இந்தியாவுடனான தூதரக உறவை குறைத்துக் கொள்வது என பாகிஸ்தான் முடிவு செய்துள்ள நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு ‌தங்கள் நாட்டு வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை ‌பின்பற்றப்படும் என‌வும் பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் அதிகாலை 2.45 ம‌ணி முதல், முற்பகல் 11 மணி வரை ‌விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. லாகூர் பகுதியில் அனைத்து வழித்தடங்களையும் பாகிஸ்தான் விமான போக்குவரத்துத்துறை மாற்றி அமைத்துள்ளது. வெளிநாட்டு விமானங்கள் 46 ஆயிரம் அடிக்கு கீழே பறக்கவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் வேறு வழித்தடத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாலகோட் தாக்குதலை அடுத்து மூடப்பட்ட விமான வழித்தடங்கள் கடந்த மாதம் 16ஆம் தேதி முழுவதுமாக திறக்கப்பட்டன.‌ இந்நிலையில் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அரசு மீண்டும் தடை விதித்துள்ளது.