கவாஜா ஆசிப் ராய்ட்டர்ஸ்
உலகம்

"பாகிஸ்தான் காணாமல் போகும்" எச்சரித்த இந்தியா; பாகிஸ்தானின் எதிர்வினை என்ன?

இந்திய ராணுவத் தளபதி உபேந்திரா திவேதியின் கருத்துக்கு பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Prakash J

-ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாமகளை அழித்தொழித்தது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். 4 நாட்களுக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதல் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பஹல்காம் தாக்குதல்

இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்திய - பாகிஸ்தான் உறவு மேலும் விரிசலடைந்தது. அது, இன்றுவரை தொடரும்நிலையில், இருதரப்பும் அந்தப் போர் பற்றிய செய்திகளை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தேவைப்படும் போதெல்லாம் எந்த எல்லையையும் கடக்க முடியும்" என்று எச்சரித்திருந்தார். அதேபோல், இந்திய ராணுவத் தளபதி உபேந்திரா திவேதி, ”உலக வரைபடத்தில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினால்" பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்; ஆபரேஷன் சிந்தூரில் காட்டிய நிதானத்தை இந்தியா அடுத்த முறையும் காட்டாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக பதிலளித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், “இந்திய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகள், மே மாத (சிந்தூர் தாக்குதல்) தோல்வியில் இழந்த அவர்களின் கறைபடிந்த நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் தோல்வியுற்ற முயற்சியாகும். 0-6 மதிப்பெண்ணுக்கு கீழ் பெற்ற இத்தகைய மோசமான தோல்விக்கு பிறகும் - ஒருவேளை மீண்டும் முயற்சித்தால் - கடவுள் விரும்பினால் முந்தைய மதிப்பெண்ணைவிட கூடுதல் மதிப்பெண் பெறலாம்.

கவாஜா ஆசிப்

எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியா அதன் சொந்த போர் விமானங்கள் இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும். பாகிஸ்தான் அல்லாஹ்வின் பெயரால் நிறுவப்பட்ட ஒரு நாடு. நமது பாதுகாவலர்கள் அல்லாஹ்வின் வீரர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.