உலகம்

காஷ்மீர் விவகாரம் : நடிகை பிரியங்காவுக்கு எதிராக பாகிஸ்தான் கடிதம்

காஷ்மீர் விவகாரம் : நடிகை பிரியங்காவுக்கு எதிராக பாகிஸ்தான் கடிதம்

webteam

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை யுனிசெஃப்-ன் நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு ஐ.நாவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் யுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதராக இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா இருக்கிறார். இந்நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்கியதற்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் புல்வாமா தாக்குதலின் போதும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பிரியங்கா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்னை எழும்போது நடுநிலையாக செயல்படாமல் ஒருதலைபட்சமாக அவர் நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் பிரியங்கா சோப்ராவை நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரீன் மசாரி ஐநாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.