உலகம்

தொடர் வன்முறை எதிரொலி: பாக். சட்டத்துறை அமைச்சர் ஹமீது ராஜினாமா

தொடர் வன்முறை எதிரொலி: பாக். சட்டத்துறை அமைச்சர் ஹமீது ராஜினாமா

webteam

பாகிஸ்தானில் நிகழ்ந்த தொடர்ச்சியான வன்முறையை தொடர்ந்து அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீது தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பாகிஸ்தானில் வேட்புமனுத் தாக்கலின் போது, வேட்பாளர்கள் மதத்தின் அடிப்படையில் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதை மாற்றி பொதுவான வாசகங்கள் அடங்கிய பிரமாணத்தை எடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மத அமைப்புகள், சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் ஜாஹித் ஹமீதை பதவியில் இருந்து நீக்கக்‌கோரி போராட்டம் நடத்தின. ‌இதில் வன்முறை வெடித்ததால் அந்நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ‌இந்நிலையில் ஜாஹித் ஹமீது தனது பதவியை இன்று ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை பிரதமர் ஷாஹித் அப்பாஸியிடம் வழங்கினார்.