உலகம்

மோடி ஒரு தீவிரவாதி: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்

மோடி ஒரு தீவிரவாதி: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்

webteam

இந்தியப் பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் காவஜா ஆசிப் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த மாதம் ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி வருகிறது என ஆவேசமாக பேசினார். இந்தியா அறிஞர்களையும், டாக்டர்களையும், உருவாக்கும் நிலையில், பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-மொகமது, ஹிஸ்புல் முஜாஹிதின் உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகளை உருவாக்குகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் சுஷ்மா சுவராஜின் ஐநா உரைக்கு பதிலளிக்கும் வகையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்து துறை அமைச்சர் ஆசிப், இந்தியப் பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி என்று கூறியுள்ளார். தாங்கள் தீவிரவாதிகளை உருவாக்குவதாக கூறிய சுஷ்மாதான், தீவிரவாதியை பிரதமராகக் கொண்டுள்ளார் என்றும், இந்தியப் பிரதமர் மோடியின் கைகளில் கொன்று குவிக்கப்பட்ட குஜராத் முஸ்லீம்களின் ரத்தம்தான் உள்ளது என்றும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். 
இந்தியாவை ஒரு தீவிரவாதக் கட்சி ஆளுவதாகவும், ஆர்.எஸ்.எஸ். ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் ஆசிப் சாடியுள்ளார். பாகிஸ்தான் அமைச்சரின் இந்த பேச்சு, இந்திய பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.