உலகம்

போலியான ஆதாரத்தை காட்டிய பாகிஸ்தான்

போலியான ஆதாரத்தை காட்டிய பாகிஸ்தான்

webteam


போலியான ஆதாரத்தை காட்டிய பாகிஸ்தானின் குட்டு ஐநா சபையில் வெளிப்பட்டது. 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் போலியான புகைப்படத்தை பாகிஸ்தான் ஆதாரமாக காட்டியது அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோஹி, முகம் முழுவதும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை ஐநா சபையில் காட்டினார். இவ்வாறான தாக்குதல்கள் கஷ்மீரில் நடப்பதாகவும், இதுதான் இந்திய ஜனநாயத்தின் உண்மை முகம் என்றும் தெரிவித்தார். ஆனால் அது, 2014-ஆம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன பெண்‌ணின் புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் இருப்பவர் காசாவைச் சேர்ந்த ரவ்யா அபு ஜாம் என்பதும், அந்த புகைப்படத்தை எடுத்தவர் ஹெய்தி லெவின் என்ற பத்திரிகையாளர் என்பதும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் ஏற்கனவே
பெரிதும் பேசப்பட்ட அந்த புகைப்படத்தை, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்த முயன்றுள்ளது பன்னாடுகளிடையே அந்நாட்டின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.