உலகம்

பாக்.கில் இந்திய டிவி ஷோக்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

webteam

பாகிஸ்தானில் இந்திய டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை லாகூர் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு இந்திய திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய திரைப்படங்களை திரையிட விதித்தது. தொலைக்காட்சி தொடர்கள் மீதான தடை நீடித்தது. இதனை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில் இந்திய டிவி நிகழ்ச்சிகளில் பாகிஸ்தான் எதிர்ப்பு கருத்துக்களோ, தகாத படக் காட்சிகளோ இருந்தால் சென்சார் செய்து வெளியிடலாம் என்று நீதிபதி மன்சூர் அலி ஷா உத்தரவிட்டுள்ளார். உலகமே ஒரே கிராமமாக சுருங்கி வரும் சூழலில், இந்திய டிவி நிகழ்ச்சிகளுக்கு ஒட்டுமொத்த தடை தேவையில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.