பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானை, இந்தியா தொடர்பு படுத்துவதை கண்டிப்பதாகக் கூறி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு துணை பிரதமர் இஷாக் தர் தீர்மானத்தை கொண்டுவந்தார்.
தீர்மானத்தின் மீது பேசிய அவர், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் எதிர்ப்பதாக கூறியுள்ளார். ஆனால், குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பாகிஸ்தானை இந்தியா குற்றம்சாட்டுவதாக கூறியுள்ள இஷாக் தர், சிந்து நதி ஒப்பந்தத்தை புறக்கணித்து, மீறியிருப்பதை, போர் போன்ற நடவடிக்கையாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்தியாவை கண்டித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.