Afghanistan's aggressive move Reuters
உலகம்

28 பேர் கொ*.. 32 பேர் கைது : அரண்டுபோன பாகிஸ்தான் ராணுவம்.. அதிரடி காட்டும் தாலிபான்!

ஆப்கானிஸ்தானின் அதிரடியால் பாகிஸ்தான் ராணுவம் நிலைகுலைந்து போயுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Praveen Joshva L

அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பிரிட்டிஷ் காலத்தில் டுராண்ட் கோடு பொதுவான எல்லையாக முடிவு செய்யப்பட்டது. இதனை அப்போதைய ஆப்கானிய மன்னர்கள் ஏற்காத நிலையில், பின்னர் வந்தவர்களும் அதனை ஏற்கவில்லை.

இந்த சூழலில் அங்கு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவர்களும் இந்த டுராண்ட் கோடு எல்லையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக சமீபகாலமாக இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. எல்லையில் சிறு சிறு மோதல்கள் வெடித்த நிலையில், அது சில மாதங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கு இடையேயான போராகவும் வெடித்தது.

கோப்புபடம்

இதனால் போர் பதற்றம் அதிகரித்த நிலையில், ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போர் தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. தொடர்ந்து காபூல், கந்தகார் ஆகிய முக்கிய நகரங்கள் மீது பாகிஸ்தான் விமானதாக்குதல் நடத்த, பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறிவைத்து தாலிபான்களும் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், தற்போது ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதாவது, ஆப்கானியர்கள் போர்வையில் தாலிபான் ராணுவத்தில் சேர்ந்து செயல்பட்டு வந்த பாகிஸ்தான் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தை சேர்ந்த 28 பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இவர்கள் தாலிபான் ராணுவத்தில் உளவாளியாக இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், இது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும் ஆப்கானிய அரசின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. எனினும் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை தாலிபான் அரசு வெளியிட்டுள்ள நிலையில், உலகளவில் பாகிஸ்தானுக்கு இது பின்னடைவாக செய்தியாவே பார்க்கப்படுகிறது.