இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது ராணுவத் தளபதி அஸிம் முனிரை, ஃபீல்ட் மார்ஷல் என்ற உயரிய ராணுவப் பதவிக்கு உயர்த்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ வரலாற்றில் இவ்வாறான மரியாதை பெற்ற இரண்டாவது ராணுவத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு எதிராக கடந்த 10ஆம் தேதி தாக்குதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்கு மறுநாளே பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரிகிறது.
ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற தோல்வியை மறைக்கவும், ராணுவம் வலிமையாக இருப்பது போன்ற பிம்பத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தவும், உள்நாட்டு குழப்பங்களை மறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என, நிபுணர்கள் கருதுகிறார்கள்.