அசிம் முனீர் எக்ஸ் தளம்
உலகம்

”ID Card எங்கே..?” ஜெர்மனியில் அவமானப்படுத்தப்பட்ட பாகி. ராணுவத் தலைவர்.. #ViralVideo

ஜெர்மனியில் நடந்த மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், பாதுகாப்பு ஊழியர்களால் நிறுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

Prakash J

ஜெர்மனியில் நடந்த மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், பாதுகாப்பு ஊழியர்களால் நிறுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது. மாநாட்டு நுழைவாயிலில், அவர் கழுத்தில் அடையாள அட்டை இல்லாமல் சென்றபோது பாதுகாலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், அவருக்குப் பின்னே வந்த அதிகாரி, அதைக் காண்பிக்க உள்ளே சென்றார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்டை நாடான பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர், அந்நாட்டுப் பாதுகாப்புப் படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சக்திவாய்ந்த பொறுப்பு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. மேலும், இது பதவியில் இருக்கும் இராணுவத் தலைவருக்கு முன்னோடியில்லாத அதிகாரத்தை வழங்கும் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் இராணுவ அதிகாரத்தை ஒரே சீருடையின்கீழ் முறையாக மையப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும். இந்த நிலையில், ஜெர்மனியில் நடந்த மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், பாதுகாப்பு ஊழியர்களால் நிறுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

அசிம் முனீர்

ஜெர்மனியில் ஆண்டுதோறும் மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும், இந்த மாநாட்டில் உலக அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. அதன்படி, உலகில் உள்ள அரசு மற்றும் ராணுவத் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் கொள்கை நிபுணர்கள் இதில் பங்கேற்கின்றனர். அந்த வகையில், நடப்பாண்டுக்கான மியூனிக் பாதுகாப்பு மாநாடு, கடந்த 13ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று நிறைவுற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசீம் முனீரும் சென்றிருந்தார். பாகிஸ்தானின் ராணுவ சீருடையில் அவர் முன்னே செல்ல, அவருக்குப் பின்னால் பிற அதிகாரிகள் வந்தனர். அனைவரும் தங்களின் அடையாள அட்டையை கழுத்தில் அணிந்திருந்தனர். ஆனால் அசீம் முனீர் அடையாள அட்டை இல்லாமல் இருந்தார். அவர் நுழைவாயில் அருகே சென்றபோது, அவரைத் தடுத்து நிறுத்திய பாதுகாவலர், ‛உங்களின் ஐடி கார்டு எங்கே'' எனக் கேட்டுள்ளார். அதற்கு அசீம் முனீரின் பின்னால் வந்த இன்னொரு ராணுவ அதிகாரி, தனது கையில் இருந்த அசீம் முனீரின் அடையாள அட்டையை எடுத்து காண்பித்தார். இதையடுத்து அவர்கள் மாநாடு நடக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்றனர். பாதுகாலவர் ஒருவரால், அசிம் முனீர் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் உலகில் பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி இருப்பதுடன் வைரலாகியும் வருகிறது. மேலும் இந்த மாநாட்டில், அசீம் முனீர் பங்கேற்றதற்கு ஜெர்மனியில் செயல்பட்டு வரும் சிந்தி அரசியல் அமைப்பான ஜெய் சிந்து முத்தாஹிதா மஹாஸ் (JSMM) அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முனீர் பாதுகாப்பு மாநாடு மிகவும் முக்கியமானது. இந்த மாநாட்டில் அசீம் முனீரை பங்கேற்க அனுமதித்து இருக்க கூடாது. அவரை வெளியேற்ற வேண்டும் என்று மாநாட்டு வளாகத்துக்கு வெளியே அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இது பாகிஸ்தானுக்கு மேலும் அவமானமாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக, இவர், அமெரிக்காவில் வசித்து வரும் பாகிஸ்தானியர்களாலும் அவமானப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.