பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் நாடு என்பது உலகிற்கே தெரியும் என இந்தியா விமர்சித்துள்ளது.
இந்திய - அமெரிக்க அமைச்சர்கள் சந்திப்பிற்கு பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரின் கருத்து வெளியாகியுள்ளது.
ஐநாவால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் மிக அதிகம் பேருக்கு புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துடன் தங்களுக்கு உள்ள தொடர்பு குறித்து அந்நாட்டு தலைவர்களே பல நேரங்களில் வெளிப்படையாக பேசியுள்ளனர் என்றும் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.