உலகம்

கோழியை சித்ரவதை செய்து கொலை செய்த சிறுவன் கைது

கோழியை சித்ரவதை செய்து கொலை செய்த சிறுவன் கைது

webteam

பாகிஸ்தானில் கோழியை சித்ரவதை செய்து கொலை செய்த சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது ஹஃபிஸாபாத். அந்தக் கிராமத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கோழியை திருடிச் சென்று அதைச் சித்ரவதை செய்து கொலை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோழியின் உரிமையாளர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அந்தச் சிறுவன் கோழியை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். 
இதன் பேரில் அந்தச் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் செய்தியை எ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. கோழியை திருடியது, துன்புறுத்தியது என பல்வேறு பிரிவுகளில் சிறுவன் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.