உலகம்

பாதுகாப்பு பட்ஜெட்டை குறைத்தது பாகிஸ்தான் ராணுவம் - இம்ரான் கான் பாராட்டு

பாதுகாப்பு பட்ஜெட்டை குறைத்தது பாகிஸ்தான் ராணுவம் - இம்ரான் கான் பாராட்டு

rajakannan

பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் ராணுவம் குறைத்துள்ளதற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் நாடானது ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் ஒன்று. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை விட பல நேரங்களில் அங்கு ராணுவம் வலிமையுடன் காணப்படும். ராணுவத்திற்கு அதிகப்படியான செலவு செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் பாகிஸ்தான் உள்ளது. 

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் தாமாக முன்வந்து பாதுகாப்புக்கான செலவை குறைத்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அசிஃப் கஃபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த நிதி ஆண்டில் பாதுகாப்புக்கான செலவு குறைத்துள்ளோம். இருப்பினும், அனைத்துவித அச்சுறுத்தலுக்கும் சரியான பதிலடி கொடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டில், “வழக்கும் ராணுவத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்தால் நாட்டின் தற்போதைய நிலைக்கு சரியில்லை. செலவை குறைத்தாலும் பலத்தில் குறைவு இருக்காது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ராணுவத்தின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். “நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ராணுவம் தாமாக முன் வந்து பாதுகாப்பு செலவுகளை குறைத்துள்ளது பாராட்டத்தக்கது” என இம்ரான் தெரிவித்துள்ளார்.