உலகம்

ஜாதவ் குடும்பத்துக்கு விசா வழங்க பாக்.உத்தரவு

ஜாதவ் குடும்பத்துக்கு விசா வழங்க பாக்.உத்தரவு

webteam

குல்பூஷன் ஜாதவ் உறவினர்களுக்கு விசா வழங்க பாகிஸ்தான் அரசு தூதரகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

உளவு பார்த்ததாகக் கூறி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான், மரண தண்டனை விதித்துள்ளது. இந்த பிரச்சினை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது.

இதற்கிடையில், பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்க அனுமதி கோரி அவர் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஜாதவை அவரது தாயாரும், மனைவியும் சந்திக்க அனுமதிப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் முடிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, ஜாதவின் குடும்பத்தினருக்கு விசா வழங்க டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 25-ம் தேதி அவர்கள் ஜாதவை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.