பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தில் பாகிஸ்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு
ஊடகங்களில், வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகள்
வெளியாகியுள்ளன.
பிற நாட்டுத் தலைவர்களின் பயணத்தில் அதிக கவனம் செலுத்தாத பாகிஸ்தான் அரசு, மோடியின் இஸ்ரேல்
பயணத்தை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டியதாக அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும்
பாதுகாப்புத்துறையில் இஸ்ரேலுடனான உறவின் மூலம் இந்தியா அதிக பலன்களைப் பெற்று வருவதாகவும், இது
தெற்காசிய பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் அச்சம் கொள்வதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.