ஆப்ரிக்க நாடுகள் முற்றிலுமாக போலியோ நோயில் இருந்து விடுபட்டதாக அறிவித்துள்ள நிலையில், உலகில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மட்டுமே தற்போது போலியோ நோய் பாதிப்பு உள்ளது.
கடைசி ஆப்ரிக்க நாடாக நைஜீரியா போலியோ நோயிலிருந்து விடுபட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், முழு ஆப்ரிக்கா கண்டமும் போலியோ இல்லாத கண்டமாக மாறியுள்ளது. இதன் மூலம் போலியோ பாதிப்பு இப்போது உலகில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே உள்ளது. 1996ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் 75,000 குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.