உலகம்

இங்கிலாந்து: நூலகத்தில் 63 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புத்தகத்தை திருப்பி அளித்த வாசகர்

JustinDurai
1957-ஆம் ஆண்டு நூலகத்திலிருந்து படிக்க எடுத்துச் சென்ற புத்தகத்தை, 63 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அளிக்கப்பட்ட ருசிகர சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் நடந்துள்ளது.
63 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புத்தகத்தைத் திருப்பி அனுப்பிய நபர் தனது உண்மையான அடையாளங்களையும் மறைத்து அனுப்பியதால் யார் என்று தெரியவில்லை. தாமதமாகத் திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல், “ஒருபோதும் செய்யாமல் இருப்பதை விடத் தாமதமாகச் செய்வது நல்லது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக நூலகத்தில் அதிகபட்சமாக 20 டாலர் வரை மட்டுமே அபராதம் விதிக்கப்படும். ஆனால் அப்படி இல்லாமல் தொடர்ந்து அபராதம் விதித்து இருந்தால் 4,722 டாலர், இந்திய மதிப்பில் 3.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இருக்க வேண்டும் என்று நூலகம் தெரிவித்துள்ளது.