பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கில், அந்நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
பனாமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கை இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த 26ஆம் தேதி விசாரணையின்போது நீதிமன்றத்தில் நவாஸ் ஆஜரான நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.