உலகம்

தாய்லாந்து முன்னாள் பிரதமரைக் கைது செய்ய உத்தரவு

தாய்லாந்து முன்னாள் பிரதமரைக் கைது செய்ய உத்தரவு

webteam

ஊழல் வழக்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லங் ஷினவத்ரா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அரிசிக்கு கூடுதல் மானியம் வழங்கிய திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக யிங்லங் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என யிங்லக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக 2015 ஆம் ஆண்டு யிங்லங் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அவர் ஆஜராகாததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு சிறைத் தண்டனையும், அரசியலில் ஈடுபடத் தடையும் விதிக்கப்படும்.