ஆப்கானிஸ்தான் fb
உலகம்

ஆப்கானிஸ்தான் | தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிப்பு! - ஐ.நா

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்துள்ளதாக ஐ. நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்ட் பென்னட் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை பார்க்கலாம்.

PT WEB

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்துள்ளதாக ஐ. நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்ட் பென்னட் ((Richard Bennett)) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அவர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2021-ல் தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்ததாகவும், சுமார் 270 பெண் நீதிபதிகளை நீக்கிவிட்டு, தீவிர இஸ்லாமியக் கருத்துகள் கொண்ட ஆண்களை நியமித்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருந்து பெண்கள் நீக்கப்பட்டுள்ளதால், வன்முறைகள் குறித்துப் புகார் அளிக்க அவர்களுக்குப் பாதுகாப்பான வழிகள் இல்லை. இதனால், விவாகரத்து, குழந்தை பாதுகாப்பு, மற்றும் வன்முறை தொடர்பான வழக்குகள் நிராகரிக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது