கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்.
கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்ட போது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். நில நடுக்கத்தால் பல வீடுகளும் தேவாலயங்களும் சேதமடைந்தன. அர்கலொசோரி என்ற கிராமத்தில் தேவாலயம் ஒன்றின் இடிபாடுகளிலிருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை எனவும் சுற்றுலாத் துறையினர் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற முக்கிய கட்டடங்களின் பாதுகாப்பு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.