உலகம்

நிலச்சரிவில் சிக்கி 4500 ரோகிங்கியா முஸ்லிம்கள் தவிப்பு

webteam

வங்க தேசத்திலுள்ள ரோகிங்கியா முஸ்லிம் அகதிகள் முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.

மியான்மர் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு பிரச்னை காரணமாக ரோகிங்கியா முஸ்லிம்கள் அந்த நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைய ஆரம்பித்தனர். இவர்கள் வங்கதேசம் மற்றும் மியான்மரின் எல்லை பகுதியான காக்ஸ் பஜாரிலுள்ள அகதிகள் முகாமில் அந்த மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் வங்கதேசத்தில் கடந்த 72 மணி நேரம் பெய்த கனமழையால் ரோகிங்கியா முஸ்லிம்களின் அகதிகள் முகாம் பெறும் சேதத்தை சந்தித்தது. இந்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் முதயவர் ஒருவர் பலியானார். அத்துடன் 4500க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 

முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நிலச்சரிவில் 170 அகதிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து ஐநாவின் அகதிகள் அமைப்பு 30ஆயிரம் ரோகிங்கியா முஸ்லிம்களை தாழ்வான இடத்திலிருந்து பாதுக்காப்பான இடத்திற்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.