உலகம்

உடல் பருமன் அதிகமானால் கொரோனாவின் தாக்கம் அதிகமாகுமா? இங்கிலாந்து அதிர்ச்சி அறிக்கை

Sinekadhara

பிஹெச்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிக எடை கொண்டவர்கள் பெரும்பாலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு இறப்பதாகவும் இங்கிலாந்து மற்றும் பிற இடங்களில் இருந்துவரும் சான்றுகள் தெரிவிக்கின்றன. BMI குறியீட்டு எண் அதிகரிக்க அதிகரிக்க ஆபத்து அதிகரிப்பதாக கூறுகின்றன.

இந்த அறிக்கையின் தீவிரத்தை முன்னிட்டு அடுத்த வாரம் போரிஸ் ஜான்சனின் அரசு உடல் பருமனைக் குறைப்பதற்கான புதிய திட்டத்தை வகுக்க உள்ளது. அதிக உடல் பருமன் அல்லது அதிக உடல் எடை, கொரோனாவின் தாக்கத்தை அதிகரித்து இறப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது என இங்கிலாந்து பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதிக எடை கொண்டிருப்பவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தற்போதைய சான்றுகள் கூறாவிட்டாலும், அளவான பி.எம்.ஐ உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது அதிக எடை கொண்டவர்கள் தீவிரமாக நோய்வாய்ப்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் பருமனான உடல்வாகு கொண்டவர்கள்தான் கொரோனா பாதித்தவுடன் சீக்கிரத்தில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றது.