சமூக வலைதளங்களை மக்கள் பயன்படுத்தும் முறை மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என்றும் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் சூழல் உருவாகி இருப்பதாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிபிசி வானொலிக்காக பிரிட்டன் இளவரசர் ஹாரியின் நேர்காணலுக்கு பதில் அளித்த ஒபாமா இதனை தெரிவித்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் செய்திகளை சமூக வலைதளங்கள் சிதைப்பதாக எச்சரிக்கை விடுத்த ஒபாமா, அதிகாரத்தில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.