உலகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் ஒரேநாளில் 109 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் ஒரேநாளில் 109 பேர் உயிரிழப்பு

jagadeesh

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதுவரை இந்த வைரஸ் தொற்றால் 2 ஆயிரத்து 345 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்தாகவும், 397 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 288 ஆக உயர்ந்துள்ளது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் வெளியுலகிற்கு தெரியவந்து 50 நாட்களுக்கு மேலான நிலையில் 20 ஆயிரத்து 659 பேர் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் உலக சுகாதார நிறுவன‌த்தின் மருத்துவர்கள் குழு கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்‌ள வுஹான் நகருக்கு செல்ல உள்ளது. 12 பேர் கொண்ட இக்குழு அங்கிருக்கும் நோய் தாக்குதல் ‌நிலையை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் என கூறப்படுகிறது.