நார்வே நாட்டில் விபத்திலிருந்து கண் இமைக்கும் நேரத்தில் பள்ளி சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது.
தெற்கு நார்வேயில் உள்ள ஹீரத் என்ற இடத்தில் பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய சிறுவன் அதன் பின்பக்கமாக இருந்து சாலையை கடக்க முயன்றான். அப்போது எதிர்புறத்தில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த சரக்கு வாகனம், சிறுவன் மீது மோதாமல் இருக்க உடனடியாக நிறுத்தப்பட்டது. இதில் அந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.