உலகம்

தென்கொரியாவுக்குள் நுழைந்த வடகொரிய வீரர்: சுட்டுப் பிடிக்கப்பட்டார்

தென்கொரியாவுக்குள் நுழைந்த வடகொரிய வீரர்: சுட்டுப் பிடிக்கப்பட்டார்

webteam

தென்கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரிய ராணுவ வீரர் சுட்டுப் பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே நீண்ட நாட்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தென்கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வடகொரிய வீரரை, தென்கொரிய படையினர் சுட்டுப்பிடித்தனர். குண்டடிபட்டு மயங்கிக் கிடந்த அந்த வீரருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

அவர் தற்போது சுயநினைவுக்கு வந்துள்ளதாகவும், அவர் எதற்காக எல்லை கடந்து வந்தார்? ஏன் வடகொரிய வீரர்களை கண்டதும் தப்பியோடினார் போன்ற விவரங்களை அவரிடம் விசாரிக்க உள்ளதாகவும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.