உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: வடகொரியா திட்டவட்டம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: வடகொரியா திட்டவட்டம்

webteam

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணையை உற்பத்தி செய்யும் வரை, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை இல்லை என வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வடகொரியா முதல் குண்டு வீசும் வரை, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மு‌யற்சியை கைவிடப் போவதில்லை என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்திருந்தார். அத்துடன் அதுவே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில்‌ அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவை தாக்கும் வகையிலான கண்டம் விட்டு‌ கண்டம் பாயும் ஏவுகணையை மேம்படுத்தும் வரை அந்நாட்டுடன் தூதரக ரீதியிலான எந்தவொரு பேச்சுவார்த்தை நடத்துவதிலும் தங்களுக்கு விருப்பம் இல்லை என வடகொரியா‌ திட்டவட்‌டமாக தெரி‌வித்துள்ளது.