உலகம்

ஜப்பானை கடந்து சென்ற வடகொரிய ஏவுகணை

ஜப்பானை கடந்து சென்ற வடகொரிய ஏவுகணை

webteam

வடகொரியா ஏவிய ஏவுகணை தங்கள் நாட்டின் வான்வெளியை கடந்து சென்றதால் ஜப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

ஜப்பான் மக்களின் பாதுகாப்புக்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷின்ஷோ அபே தெரிவித்துள்ளார். வடகொரியா கடந்த சில நாட்களில் குறுகிய தூரம் பாய்ந்து தாக்கும் மூன்று ஏவுகணை அடுத்தடுத்து ஏவி சோதனை நடத்தியது. அதில் ஒரு ஏவுகணை ஜப்பானைக் கடந்து சென்றதாக அபே தெரிவித்தார். இதுதொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும், மக்களைப் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் ஜப்பான் அரசு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். வடகொரியா, அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.