வட கொரியா
வட கொரியா PT
உலகம்

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை; கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

PT WEB

வடகொரிய ராணுவம் ஏவுகணை சோதனைகளில் மீண்டும் ஈடுபட்டதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வடகொரிய சோதனை குறித்து ஜப்பான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா

அதிகாலையில் வடகொரியாவில் இருந்து பல ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஏவுகணைகள் ஜப்பானுக்கும், கொரிய தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் விழுந்ததாகவும் ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் தடைகளை மீறி வடகொரியா மேற்கொண்டுவரும் இத்தகைய சோதனைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஃபுமியோ கிஷிடா குறிப்பிட்டார். ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, அணு ஆயுதங்களுடன் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.

இதற்கிடையே, தென்கொரியாவுடன் அமெரிக்க படைகள் அவ்வப்போது மேற்கொண்டுவரும் கூட்டு போர் பயிற்சிகள், வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. கடைசியாக கடந்த பிப்ரவரி மாத மத்தியில், போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகளை வடகொரியா சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மீண்டும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.