உலகம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

webteam

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதித்துள்ளது.

வடகொரியா ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் ஹோக்கைடோ வான்பரப்பு வழியாக வடகொரியா ஏவுகணை செலுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து வடகொரியா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் ஜப்பான் வான்பரப்பு வழியாக ஏவுகணை செலுத்தாவிட்டாலும், அதே போன்ற ஒரு சோதனையை வடகொரியா மீண்டும் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து ஜப்பான் கடல் அருகே விழுந்ததாக தெரியவந்துள்ளது.

இதனால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ‌தென் கொரிய அதிபர் மூன் ஜே ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் இந்த சோதனை உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.