உலகம்

பத்து நாள்களில் 5 முறை ஏவுகணை சோதனை.. ஜப்பானுக்கு பயம் காட்டும் வடகொரியா

webteam

வடகொரியா கடந்த பத்து நாள்களில் 5 முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜப்பான் நாட்டின் வான் எல்லைக்கு மேல் செவ்வாய்க்கிழமை
மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஏவுகணைச் சோதனை சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2017க்கு பிறகு ஜப்பானின் வான் எல்லையில் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை இது. மேலும் கடந்த வாரம் அமெரிக்கா , தென்கொரியா, ஜப்பான் நாடுகள் இணைந்து கடற்படை ஒத்திகைகள் நடத்தப்பட்ட நிலையில் , 4500 கி.மீ தொலைவு செல்லக்கூடிய இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வடகொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.