ஏவுகணை சோதனை விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த தீர்மானங்களுக்கு வடகொரியா கட்டுப்படவேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா செலுத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஜப்பானின் வான்வழியாக பறந்து பசிபிக் பகுதியில் உள்ள ஹொக்கைடோவில் வந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து வடகொரியாவுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கை லவ்ரோவ், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த கட்டுப்பாடுகளுக்கு வடகொரியா கீழ்ப்படிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.