உலகம்

ஒரே வாரத்தில் 2வது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை

JustinDurai

வடகொரியா ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக ஏவுகணை பரிசோதனை செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வடகொரியா சில நாட்களுக்கு முன் ஒலியை விட வேகமாக பறந்து சென்று தாக்கும் ஏவுகணையை சோதனை செய்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஏவுகணையை சோதித்துள்ளது. இதை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஜப்பானை ஒட்டிய கடற்பரப்பில் விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் செயல் மிகவும் கவலை தருவதாக ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையிலும் பொருளாதார சிக்கல்கள் தீவிரமாக உள்ள நிலையிலும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை அந்நாடு மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக தடை செய்யப்பட்ட அணுஆயுத ஏவுகணைகள் பரிசோதனை திட்டத்தை வட கொரியா கைவிட வேண்டுமென அந்நாட்டை அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, அல்பேனியா ஆகிய 5 நாடுகள் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டிருந்தன.