உலகம்

வடகொரியாவுடன் சீன வர்த்தகம் அதிகரிப்பு

வடகொரியாவுடன் சீன வர்த்தகம் அதிகரிப்பு

webteam

வடகொரியாவிற்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் தர அமெரிக்கா வலிறுத்தி வரும் நிலையில், அந்நாட்டுடனான சீனாவின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. 
நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வடகொரியாவுடனான சீன வர்த்தகம் 10.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், வடகொரியா மீதான ஐநாவின் தடையை சீனா மீறவில்லை என்று தெரிவித்துள்ளது. 
வடகொரியாவுடன், மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான வர்த்தகமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன அரசு விளக்கமளித்துள்ளது. அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி வடகொரியாவிற்கு ஐநா தடை விதித்துள்ளது. அதேபோல், வடகொரியாவிற்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் தர வேண்டும் என அதன் நட்பு நாடான சீனாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.